மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தெலுங்கு பிக் பாஸ் 2 ஆரம்பமானது: 16 போட்டியாளர்களின் பட்டியல்! (புகைப்படங்கள் & விடியோ)

ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சின் போட்டியாளர்கள் நேற்று...

News image
Updated On :11 ஜூன் 2018, 10:36 am

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தமிழில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

முதல் பாகத்தை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். முதல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி 71 நாள்களில் நிறைவுபெற்றது. நடிகர்கள் நவ்தீப், சிவ பாலாஜி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சமீர், சம்பூர்ணேஷ் பாபு, தன்ராஜ், பிரின்ஸ் நடிகைகள் அர்ச்சனா, முமைத் கான், ஜோதி, ஹரி தேஜா, திக்‌ஷா பந்த், மாடலிங் துறையைச் சேர்ந்த கத்தி கார்த்திகா, பாடகிகள் மது ப்ரியா, கல்பனா ராகவேந்தர் மற்றும் மகேஷ் கத்தி என 16 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இறுதிச்சுற்றில் நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று பரிசுத்தொகையான ரூ. 50 லட்சத்தைத் தட்டிச் சென்றார். கடந்த 14 வருடங்களாகத் திரைத்துறையில் உள்ள சிவ பாலாஜி தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்துள்ளார். இரண்டாம் இடம், நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணாவுக்குக் கிடைத்தது. 

தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு நடிகர் நானி தொகுப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டார் மா தொலைக்காட்சியில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சின் போட்டியாளர்கள் முதல் நாளன்று அறிமுகப்படுத்தப்பட்டார்கள். 

தெலுங்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 போட்டியாளர்களின் பட்டியல்:

1. கீதா மாதுரி (பாடகி)

Story image

2. அமித் திவாரி (நடிகர்)

Story image

3. தீப்தி நல்லமொது (டிவி9 தொகுப்பாளர்)

Story image

4. தனிஷ் (நடிகர்)

Story image

5. பாபு கோகினேனி (விமரிசகர்)

Story image

6. பானு ஸ்ரீ (நடிகை)

Story image

7. ரோல் ரிடா (ராப் பாடகர்)

Story image

8. ஷ்யாமளா (நடிகை)

Story image

9. கிரீத்தி தமாராஜூ (நடிகர்)

Story image

10. தீப்தி சுனைனா (டப்ஸ்மாஷ் கலைஞர்)

Story image

11. கெளசல் (நடிகர்)

Story image

12. தேஜஸ்வி (நடிகை)

Story image

13. சம்ரத் ரெட்டி (நடிகர்)

Story image

14. கணேஷ் (ஆர்ஜே)

Story image

15. சஞ்சனா அண்ணே (மாடல்)

Story image

16. நுதன் நாய்டு (சாமானியர்)

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.