வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

இன்று மும்பை வொர்லி பகுதியிலுள்ள 'பியூ மான்டே டவர்ஸ்’ (Beau Monde Towers ) எனும் அடுக்ககத்தின்

News image
Updated On :13 ஜூன் 2018, 11:30 am

இன்று மும்பை வொர்லி பகுதியிலுள்ள 'பியூ மான்டே டவர்ஸ்’ (Beau Monde Towers ) எனும் அடுக்ககத்தின் பி பிரிவு 33-வது தளத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்து ஏற்பட்ட பி-பிரிவில் (B-Wing) தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வருகிறார் என்ற தகவல்கள் மீடியாவில் வெளியாகி பரபரப்பானது. தீபிகாவுக்கு சொந்தமான ப்ளாட் 26-வது மாடியில் உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் வீட்டின் பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் என்றும் தீபிகா படுகோன் படப்பிடிப்புக்காக வெளியே சென்றுள்ளார், அவரது வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தீபிகா தரப்பினர் மீடியாவிடம் கூறினர்.

இந்த தீ விபத்திலிருந்து 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.