/

வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணி பட அறிவிப்பை கலாய்த்த தமிழ்ப்படம்-2 இயக்குநர் 

இயக்குநர் வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள புதிய பட அறிவிப்பை தமிழ்ப்படம்-2 இயக்குநர் சி.எஸ்.அமுதன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:04 pm

DIN

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள புதிய பட அறிவிப்பை தமிழ்ப்படம்-2 இயக்குநர் சி.எஸ்.அமுதன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

சிம்பு - வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு புதனன்று வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.  

மேலும் இந்தப் படம் எந்தப் படத்தின் தொடர்ச்சியும் அல்ல, புதிய கதையில் இந்தப் படத்தை இயக்கிறேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள புதிய பட அறிவிப்பை தமிழ்ப்படம்-2 இயக்குநர் சி.எஸ்.அமுதன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

தமிழ்ப்படம் 2 இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பட அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்து, ட்வீட் செய்தார். இதுகுறித்து 'இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்! ஒரு பர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியா இருக்கும்' என்று அமுதன், இயக்குநர்  வெங்கட் பிரபுவின் ட்விட்டை குறிப்பிட்டு வேண்டுகோள் வைத்தார்.

அவருக்கு, `எப்படியும் உங்க பட ரிலீசுக்கு அப்பறம் தான் சார்! நன்றி' என்று வெங்கட் பிரபு பதில் அளித்தார்.

தமிழ்ப்படம் 2 பட அறிவிப்பு வெளியானது முதலே பல்வேறு அரசியல் கட்சிகள் ,அவர்களது செயல்பாடுகள், புதுப்படங்கள், ஹீரோக்கள் என அனைவரையும் தொடர்ந்து கலாய்த்து போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட தமிழ்ப்படம் 2 படக்குழு சமீபத்தில் வெளியான டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை கலாய்த்து, படத்தின் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வரிசையில்தான் இந்த பட அறிவிப்பைக் கிண்டல் செய்யும் பொருட்டு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.