மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய மலையாள நடிகர்!

பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டு வரும் நிலையில்

News image
Updated On :1 மார்ச் 2018, 7:11 am

பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டு வரும் நிலையில், முன்னணி நடிகர்களும் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இயங்கி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் சற்று லேட்டாக ட்விட்டரில் இணைந்தாலும், அவரது பாணியில் லேட்டஸ்டாகவே லைக்குகளை அள்ளி வருபவர். 

அண்மையில் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையில் ரஜினியை முந்தியிருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். 

ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலில் தொடங்கி, புருவ அழகி பிரியா வாரியர் வரை மலையாள நடிகைகள் சமூக வலைத்தளங்களில் மாஸ் ட்ரெண்ட் ஆகி வருகின்றர். இதற்கு முன்னதாகவே 'ப்ரேமம்' படப் புகழ் நிவின் பாலி உள்ளிட்ட மலையாள நடிகர்களும் மல்லுவுட்டைத் தாண்டி கோலிவுட்டிலும் அனேக ரசிகர்களை கவர்ந்து வந்தார்கள். 

Story image

ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்து 56 ஆயிரமாக உள்ளது உள்ளது.

Story image

மோகன்லாலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்து 69 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மோகன்லால் ட்விட்டரில் ரஜினியை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

Story image

ரஜினிக்கு உள்ள ரசிகர்கள் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் அது பல லட்சத்துக்கும் மேலாகவே இருக்கும். இணையத்தில் இணைந்திருப்பவர்களில் சிலரே இந்த நான்கு லட்சத்தி சொச்சம் என்ற கணக்கு என்றாலும், மோகன்லால் ட்விட்டரில் ரஜினியை விட அதிக ஃபாலோயர்களைக் கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கே ஆச்சரியம் அளித்துள்ளது. அலட்டாத நடிப்புக்கு சொந்தக்காரரான மோகன்லாலும், எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாரும் நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.