கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை, நேற்று (மார்ச் 10, 2018) தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை விளைவித்துள்ளது. மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் ரீஜென்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார்.
சில டிவி சீரியல்களில் நடித்திருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, அவர்கள் சந்தேகம் அடைந்து உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை முழுவதும் அந்த வீட்டி கதவு திறக்கப் படமால் இருக்கவே அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு கதவை பல முறை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரால் திறக்கவும் முடியவில்லை. சந்தேகம் வலுப்பெற்று அவர் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.
அங்கு வந்த போலீசார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது அறையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா் பாஜகவை வீழ்த்த வேண்டும்’: கேஜரிவால் பிரசாரம்

சித்திரைத் திருவிழாவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை! - மருத்துவா் பா.சரவணன்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


