வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாலிவுட்டில் அறிமுகமாகும் ப்ரியா வாரியர்: பிரபல இயக்குநர் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்!

ஒரு பாட்டின் மூலம் கிடைத்த புகழால் பாலிவுட்டில் நுழையவுள்ளார் ப்ரியா வாரியர்... 

News image
Updated On :13 மார்ச் 2018, 5:17 am

எழில்

பிரபல மலையாளத் திரைப்படம் "பிரேமம்' படத்தின் நடிகை சாய் பல்லவி, "ஜிமிக்கி கம்மல்' பாடலுக்காக ஆடிய ஷெரில் இருவரும் கேரளம், தமிழகம் முழுவதும் பேசப்பட்டவர்கள். இந்த வரிசையில் இடம்பிடித்தவர், ப்ரியா பிரகாஷ் வாரியர்.

தமிழகம், கேரளத்தைத் தாண்டி ப்ரியா இந்தியா முழுவதும் எல்லா செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்படுகிறார். "ஒரு அடார் லவ்' மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள "மாணிக்க மலராய பூவி...' பாட்டில் ப்ரியா புருவங்களை வில்லாக வளைத்து கண்ணடிக்கும் காட்சியும் அப்பாடலின் காணொளியும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில் அந்த ஒரு பாட்டின் மூலம் கிடைத்த புகழால் பாலிவுட்டில் நுழையவுள்ளார் ப்ரியா வாரியர். 

பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் படத்தில் ப்ரியா வாரியர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. சிம்பா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிக்கிறார். சிம்பா படத்தில் ப்ரியா வாரியர் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.