உதயநிதி எப்படிப்பட்ட நடிகர் என்று கூறுகிறார் நடிகை தமன்னா!

தமன்னா விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் படம் சமீபத்தில் வெளியானது. அதன் பின் தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தி
உதயநிதி எப்படிப்பட்ட நடிகர் என்று கூறுகிறார் நடிகை தமன்னா!
Updated on
1 min read

தமன்னா நடித்த ஸ்கெட்ச் படம் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பை கொடைக்கானலில் முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் வங்கி பணியாளராக நடித்துள்ளார் தமன்னா. தனது இன்ஸ்டாகிராமில் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவர் ‘காலம் மிக விரைவாக ஓடுகிறது. ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. சீனுவின் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சிக்குரியது. உதயநிதி  ஒரு சென்சிட்டிவ் ஆக்டர். இந்தப் படத்தில் அவர் வித்யாசமாக நடித்துள்ளார். நிச்சயம் அனைவருக்கும் அவரது கதாபாத்திரம் பிடிக்கும். இந்தப் படம் இப்போதுதான் ஷூட் பண்ண ஆரம்பித்தது போலுள்ளது, ஆனால் அதற்குள் முடியப் போகிறது’ என்று வியப்புடன் பதிவிட்டிருந்தார் தமன்னா.

சமூக அக்கறை சார்ந்த இந்தப் படம் ஒரு காதல் கதையும் கூட. ஜனவரியில் தொடங்கிய படப்பிடிப்பு விரைவாக நடந்து முடிந்துள்ளது. சீனு ராமசாமியுடன் இதற்கு முன் தர்மதுரை படத்தில் இணைந்திருந்தார் தமன்னா. கண்ணே கலைமானே இவர்களது இரண்டாவது படம். படத்தில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றபின் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com