
நடிகர் ஷாரூக்கான் தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கத்ரீனா கயப், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜீரோ, அண்மையில் இறந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படம். இதில் அவர் நடிகையாக தன்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகை கத்ரீனா கயப் போட்டோகிராபியில் மிகுந்த ஆர்வமுடையவர். தனது திறமையை விதவிதமான செல்ஃபி எடுத்து அடிக்கடி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருபவர். அண்மையில் ஜீரோ பட ஷூட்டிங்கின் போதும் கத்ரீனா கயப் நிறைய போட்டோக்கள் எடுத்துள்ளார்.

இந்த முறை செல்பி அல்ல, அவர் அதிகம் தன் கேமரா கண்களால் சுட்டுத் தள்ளியது ஷாரூக்கானைத் தான். கத்ரீனாவை தனது மீடியா மேனேஜராக ஏற்கனவே அறிவித்திருத்திருந்தார் ஷாரூக்கான். தற்போது கத்ரீனா எடுத்த புகைப்பங்களை சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது அவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

கத்ரீனா கயஃபுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக்கான் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகை ஜூஹி சாவ்லாவுடன் தான் நடித்த தனது முதல் படமான தர் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியையும், தற்போது நடித்து வரும் ஜீரோ படத்தையும் ஃபோட்டோஷாப் செய்து ஒரு படத்தை வெளியிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Cos she doesnât eat ice cream in real Cos she has worked so hardampcos this reminds me of DarronaanandlraiZerothe filmI lov u kkkKatrinapic.twitter.com/lrc
mdashShah Rukh KhaniamsrkMarch 17 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








