இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

'நடிகையர் திலகம்' படப்பிடிப்பு நிறைவு: கீர்த்தி சுரேஷ் உருக்கம்!

மிகவும் உணர்வுபூர்வமாகக் கடந்தகாலத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். நாக் அஸ்வின் மற்றும் விஜயாந்தி பிலிம்ஸ் ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்ததற்கு...

News image
Updated On :22 மார்ச் 2018, 11:55 am

எழில்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்கிற பெயரிலும் உருவாக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் பத்திரிகையாளராக சமந்தாவும் நடித்துள்ளார்கள். 

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மே 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் கூறியதாவது:

கடந்த ஒருவருடமாக நீடித்த அற்புதமான பயணம் நிறைவுபெற்றுள்ளது. மிகவும் உணர்வுபூர்வமாகக் கடந்தகாலத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். நாக் அஸ்வின் மற்றும் விஜயாந்தி பிலிம்ஸ் ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்ததற்குப் பெரிய நன்றி. கடந்த காலம் குறித்துப் பெருமையுடன் திரும்பிப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு. சாவித்ரியின் வாழ்க்கையை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.