இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பத்மாவத் படத்துக்குப் பிறகு இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலித்த ஹிந்திப் படம்!

பெண்களுக்கு எதிரான படம் என்கிற விமரிசனத்தை எதிர்கொண்டாலும் வசூலில் அனைவருடைய எதிர்பார்ப்பையும் தாண்டியுள்ளது...

News image
Updated On :22 மார்ச் 2018, 10:52 am

எழில்

பத்மாவத் படத்துக்குப் பிறகு மற்றொரு ஹிந்திப் படம் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்'  படம் இந்தியாவில் சமீபத்தில் தனது ரூ. 300 கோடி வசூலை அடைந்தது.

இந்நிலையில் மற்றொரு ஹிந்திப் படம் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. 

கார்த்திக் ஆர்யன், சன்னி நிஜார், நுஷ்ரத் பருச்சா நடிப்பில் லவ் ரஞ்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் - சோனு கே டிடு கி ஸ்வீட்டி (SonuKeTituKiSweety).  

பிரபலங்கள் நடிக்காத இந்தப் படம் தனது நான்காவது வாரத்தில் நூறு கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த வாரம் திங்கள் முதல் குறைந்தபட்சம் ரூ. 75 லட்சம் வசூலைப் பெற்று தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான படம் என்கிற விமரிசனத்தை எதிர்கொண்டாலும் வசூலில் அனைவருடைய எதிர்பார்ப்பையும் தாண்டியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.