தற்போது 32 வயதாகும் தீபிகா படுகோன் நீண்ட காலமாக ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக பாலிவுட்டில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

தீபிகாவின் அம்மா உஜாலா படுகோன் மற்றும் சகோதரி அனிஷா படுகோன் ஆகியோர் திருமணத்திற்கு தேவையான பொருட்களையும், தீபிகாவிற்கான நகைகளையும் பெங்களூருவில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வெளியானது. தனது திருமணத்தை தென்னிந்திய முறைப்படி நடத்த ஆசைப்படுகிறாராம் தீபிகா. விரைவில் இந்த திருமண அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
தீபிகாவின் திருமண செய்தியைப் பற்றி அறிந்த நெட்டிசன்கள் தீபிகா - ரன்வீரை வைத்து போட்டோஷாப் செய்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட, அது உடனடியாக வைரலானது.

விஷால் பரத்வாஜ் இயக்கவிருக்கும் சப்னா தீதி படத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார் தீபிகா. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான இர்ஃபான் கான் உடல் நலிவுற்று, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் தற்போது சிம்பா எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தீபிகா, ரன்வீர் ஜோடி தற்போது லண்டனில் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜோடியைப் பொருத்தவரையில் மீடியாவில் பேசுவதையும், திருமணம் குறித்து செய்திகளை வெளியிடுவதிலும் தயக்கம் காட்ட மாட்டார்கள் என நம்புகிறது பாலிவுட். விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா போல ரகசியத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் நம்புகிறது பாலிவுட் மீடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


