இந்தியாவின் இரண்டு தங்க மங்கைகள்! அனுஷ்கா ஷர்மா மற்றும் பி.வி.சிந்துவுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்!

அனுஷ்கா ஷர்மா - பிரபல மாடல், பாலிவுட் நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத் திறமை உடையவர் இவர்.
இந்தியாவின் இரண்டு தங்க மங்கைகள்! அனுஷ்கா ஷர்மா மற்றும் பி.வி.சிந்துவுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்!
Published on
Updated on
2 min read

அனுஷ்கா ஷர்மா - பிரபல மாடல், பாலிவுட் நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத் திறமை உடையவர் இவர். தற்போது 29 வயதாகும் இவர் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடிப்பதைத் தொடர்கிறார். 2007-ம் ஆண்டு மாடலாக தனது வாழ்க்கையத் தொடங்கிய இவர் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.  ஷாருக்கானுக்கு ஜோடியாக ரப்நே பனாதி ஜோடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படமே சூப்பர் ஹிட்டாக தொடர்ந்து பத்மாஷ் கம்பெனி, பாண்ட் பாஜா பாரத், பாட்டியாலா ஹவுஸ், பிகே என பல வெற்றிப் படங்களில் நடித்தார். தொடர்ந்து என்எச் 10, பரி உள்ளிட்ட சில படங்களை தயாரித்து நடிக்கவும் செய்தார். 

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆசியாவின் 30 வயதுக்கு உட்பட்ட தங்கள் துறையின் முன்னோடிகளும் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரபலங்கள் (innovators and disruptors who are reshaping their industries and changing Asia for the better) என்ற பட்டியலில் 300 பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டது. இந்த லிஸ்டில் முதல் 30 பேர் பட்டியலில் இந்தியாவிலிருந்து நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இடம்பிடித்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து பாடகி மொமினா முஸ்டெஹ்சானும் இந்த பட்டியலில் உள்ளார்.

இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com