பிரபல நடிகை சோனம் கபூரின் திருமணம் இன்று நடைபெற்றது! (படங்கள்)
பிரபல நடிகையும் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அகுஜாவை இன்று திருமணம் செய்தார்...


பிரபல நடிகையும் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அகுஜாவை இன்று திருமணம் செய்தார். சோனம் - ஆனந்த் ஆகிய இருவரும் கடந்த இரு வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்.
நடிகை சோனம் கபூர், நடிகர் அனில் கபூரின் மகள். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அனில் கபூரின் அண்ணன்.
ஆனந்த் அகுஜா தொழிலதிபர். ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளரான ஹரிஷ் அகுஜாவின் பேரன். அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார் ஆனந்த்.
நேற்று மெஹந்தி விழா நடைபெற்றது. இன்று காலை 11 மணி முதல் 12.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சோனம் கபூரின் உறவினர் வீட்டில் பந்த்ரா பகுதியில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் அமிதாப் பச்சன், போனி கபூர், ஸ்ரீதேவி மகள்கள், கரீனா கபூர், கரீஷ்மா கபூர். ராணி முகர்ஜி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இன்றிரவு நடன நிகழ்ச்சி தி லீலா-வில் நடைபெறவுள்ளது. இந்தத் திருமண நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)






தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...