
விஷால் தயாரித்துள்ள கன்னடப் படமொன்று சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பை மற்றும் கர்நாடகாவில் உள்ள கேங்ஸ்டர்கள் குறித்த படம் கேஜிஎஃப் என்கிற பெயரில் உருவாகியுள்ளது. கேஜிஎஃப் என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் என்பதன் சுருக்கம். 1970களில் கோலார் தங்க வயல் பகுதியில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார்.
யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎஃப் படம் இரு பாகமாக வெளிவரவுள்ளது. கன்னடத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 21 அன்று கேஜிஎஃப் வெளிவரவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமூகவலைத்தளங்களில் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.