ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ்-மென் உள்ளிட்ட புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவரும் ஹாலிவுட் நடிகருமான ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது, 95.
மார்வெல் காமிஸ் நிறுவனத்தின் ஆசிரியராகவும் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
உடல்நலக்குறைவால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சீடர்ஸ் சினாய் மெடிக்கல் செண்டரில் அனுமதிக்கப்பட்ட ஸ்டான் லீ, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். லீயின் மனைவி ஜுவான் 2017-ல் மரணமடைந்தார். லீ-க்கு ஜேசி லீ என்கிற மகள் உள்ளார்.
1922-ல், நியூ யார்க்கில் பிறந்தவர் ஸ்டான் லீ. பள்ளிப் படிப்பு முடித்த பிறகு டைம்லி காமிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். ஹார்டி பாய்ஸ் சாகசப் புத்தகங்கள் மற்றும் எர்ரோல் ஃபிலின் படங்கள் மீது ஆர்வம் கொண்டதால் அந்தப் பணியில் சேர்ந்தார். 17 வயதில் டைம்லி காமிஸ் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை அடைந்தார். பிறகு அட்லஸ் காமிஸ் என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு மார்வெல் என்கிற பெயரைப் பிறகு அடைந்தது. ஸ்டான்லே மார்டின் லியபர் என்கிற தனது பெயரை காமிஸ் புத்தகங்களுக்காக லீ என மாற்றிக்கொண்டார். மார்வெல் நிறுவனம் மூலமாக பலதரப்பட்ட காமிக்ஸ் கதாபாத்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். 1960-ல் இவர் உருவாக்கிய ஃபெண்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்கள் பெரிய கவனம் பெற்றன. பிறகு 1962-ல் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
அமெரிக்காவில் காமிக்ஸ் புத்தகமும் அதன் கதாபாத்திரங்களும் புகழடைந்ததற்கு முக்கியக் காரணமானார். 1960களில் இவர் அடுத்தடுத்து உருவாக்கிய ஃபெண்டாஸ்டிக் ஃபோர், தி ஹல்க், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், பிளாக் பாந்தர் போன்றவை காமிஸ் உலகில் அதிகக் கவனத்தை ஈர்த்தன. 1970கள் முதல் இவர் உருவாக்கிய சூப்பர் ஹீரோக்கள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்தன.
கிர்பி உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹல்க், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், எக்ஸ் - மேன் போன்ற ஹாலிவுட் கொண்டாடிய கதாபாத்திரங்களை உருவாக்கி திரைத்துறையிலும் முத்திரை பதித்தார். இவர் உருவாக்கிய எக்ஸ் மென் கதாபாத்திரம் 2000-ம் ஆண்டில் ஹாலிவுட் படமாக வெளிவந்து வசூலில் (130 மில்லியன் டாலர்) சாதனை படைத்தது. 2002-ல் வெளிவந்த லீ-யின் மற்றொரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ஸ்பைடர் மேன், 400 மில்லியன் டாலர் வசூலைக் கொட்டியது. அதன்பிறகு மார்வெல் கதாபாத்திரங்களைக் கொண்டு படங்கள் வெளிவந்தன. சமீபத்தில் வெளிவந்த Avengers: Infinity War உலகம் முழுக்க 2 பில்லியன் டாலர் வசூலித்தது. கடந்த 10 வருடங்களில் மார்வெல் படங்கள் மட்டும் 17.6 பில்லியன் டாலர் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளன. மேலும் மார்வெல் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களிலும் லீ நடித்துள்ளார். 2008-ல், அமெரி்க்க அரசின் மிக உயரிய விருதான நேஷனல் மெடல் ஆப் ஆர்ட்ஸ் விருதைப் பெற்றார்.
ஸ்டான் லீயின் மரணத்துக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


