/

மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டேன்: நடிகர் விஷ்ணு விஷால் அறிவிப்பு

கடந்த ஒருவருடமாக நானும் ரஜினியும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது சட்டபூர்வமாக விவாகரத்து ஆகியுள்ளது...

News image
Updated On :13 நவம்பர் 2018, 10:55 am

DIN

மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த வருடம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரஜினியைத் தான் விவாகரத்து செய்துள்ளதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்டுள்ளதாவது:

கடந்த ஒருவருடமாக நானும் ரஜினியும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது சட்டபூர்வமாக விவாகரத்து ஆகியுள்ளது. எங்களுக்கு அழகான மகன் உண்டு. அவனுக்கு அற்புதமான வாழ்க்கை அளிப்பதுதான் பெற்றோரான எங்களுக்கு முக்கியமான விஷயம். நாங்கள் இருவரும் இணைந்து அற்புதமான பலவருடங்களைக் கடந்துள்ளோம். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் நடந்துகொள்வோம்.

எங்கள் குடும்பம் மற்றும் எங்கள் மகனுக்காக எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.