
டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்துள்ள படம் - அடங்க மறு. சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜெயம் ரவியின் 24-வது படம் இது. தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ளார். இசை - சாம் சிஎஸ். அடங்க மறு படம் முதலில் நவம்பர் 16 அன்று வெளியாக இருந்தது. ஆனால் அந்தத் தினத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருந்ததால் அதன் வெளியீடு தள்ளிப் போனது.
இந்நிலையில் அடங்க மறு படம் டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதக்காதி, சர்வம் தாள மயம், பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம் என நான்கு படங்கள் அதே தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடங்க மறு படமும் போட்டியில் இணைந்துள்ளது. இதனால் டிசம்பர் 21 அன்று ஐந்து படங்கள் வெளிவருகிற சூழல் உருவாகியுள்ளது. டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள படங்களுக்கு 5 நாள்களுக்கு நல்ல வசூல் கிடைக்க வாய்ப்புண்டு என்பதால் அந்நாளில் வெளியாகப் பல படங்கள் ஆர்வம் காண்பித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





