தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தயாரிப்பாளர் ஆனார் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன்!

பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா, படத்தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

News image
Updated On :22 நவம்பர் 2018, 7:07 am

பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா, படத்தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

ஆகாசவானி என்கிற தெலுங்குப் படத்தை ஷோயிங் பிஸினஸ் என்கிற பட நிறுவனம் மூலமாக கார்த்திகேயா தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அஸ்வின் கங்காராஜு இயக்குகிறார். 

இப்படத்துக்கு பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணியின் மகன் கால பைரவா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாகுபலி படத்தில் ராஜமெளலியிடம் யூனிட் இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திகேயா, பாடகி பூஜா குமாரைக் காதலித்து வருகிறார். பூஜா, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் அண்ணன் ராம் பிரசாத்தின் மகள். கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகேயா - பூஜா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்ததாக, ஜனவரி மாதம் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.