மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மணி ரத்னம் படங்களில் அதிக வசூலைப் பெறவிருக்கும் செக்கச் சிவந்த வானம்!

இதுவரை ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்தப் படம் வரும்நாள்களில் தமிழ்நாட்டில் மட்டும்...

News image
Updated On :1 அக்டோபர் 2018, 10:10 am

எழில்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. 

முதல் நாள் வசூலை விடவும் நேற்று அதிக வசூல் கிடைத்துள்ளது. முதல் நாளன்று ரூ. 8 கோடி வசூலித்த இந்தப் படம் அடுத்த இரு நாள்களில் ரூ. 6.20 மற்றும் ரூ. 7.50 கோடிகளை வசூலாகப் பெற்றுள்ளது. எனினும் நேற்றைய வசூல் முதல் நாள் வசூலை விடவும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இதுவரை ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்தப் படம் வரும்நாள்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 50 கோடி வசூலை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. நாளை விடுமுறை என்பதால் இது சாத்தியமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சென்னையில் கிட்டத்தட்ட ரூ. 4 கோடி வசூலை (ரூ. 3.80) நான்கு நாளில் பெற்றுள்ளது. மேலும் கர்நாடகாவில் ரூ. 2.70 கோடி வசூலை இதுவரை பெற்றுள்ளது. இத்தகவல்கள் திரையுலக வணிக வட்டாரங்களில் சொல்லப்பட்டாலும் படத்தின் அதிகாரபூர்வமான வசூல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.