/

பேட்ட படத்தின் 2-ஆவது லுக் வெளியானது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் 2-ஆவது லுக் வியாழக்கிழமை வெளியானது. 

News image
Updated On :4 அக்டோபர் 2018, 1:57 pm

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் 2-ஆவது லுக் வியாழக்கிழமை வெளியானது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு பேட்ட என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பேட்ட படத்தின் 2-ஆவது லுக் வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் வெளியிடப்பட்டது. இது தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகப்பட்டு வருகிறது.

மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் இந்த லுக், இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் விடியோவும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.