பல ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும் அதற்கு முன்பு தெலுங்கு சூப்பர் ஸ்டாராகவும் கோலோச்சிய என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகி வருவது பழைய செய்தி. அத்திரைப்படத்தில் யாரெல்லாம் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனும் புதிர்கள் ஒவ்வொன்றாக விடுபட்டு வருகின்றன. முதலில் என் டி ஆராக நடித்து அசத்தப் போவது என் டி ஆரின் மகனும் டோலிவுட் சீனியர் ஹீரோவுமான பாலகிருஷ்ணா. என் டி ஆரின் அரசியல் வாழ்வில் மிகப்பெரும் பங்காற்றியவர் அவருடைய மருமகனும் இன்றைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. அவருடைய வேடத்தை ஏற்று நடிக்கப் போகிறார் ராணா டகுபதி. என் டி ஆரின் சம கால சூப்பர் ஸ்டாரான ஏன் என் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பது ஏ என் ஆரின் பேரன் சுமந்த். சாவித்ரியாக நடிக்கவிருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ல நடிகை நித்யா மேனன். இப்படி சூப்பர் நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்த இந்த பயோபிக்கின் அடுத்த ஆச்சர்யம் இந்தியாவின் கனவுக்கன்னியாக அந்தக் காலத்தில் திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது யார் என்பதாகத் தான் இருந்தது! இப்போது அந்த ஆச்சர்யம் உடைபட்டிருக்கிறது. என் டி ஆர் பயோபிக்கில் ஸ்ரீதேவியாக நடிக்கவிருப்பது நடிகை ரகுல் ப்ரீத் சிங் எனும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதாக ஆந்திர சினிமா பட்சிகள் கூவுகின்றன.
ஆந்திராவில் ரகுலுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம். எனவே ஸ்ரீதேவி வேடத்தில் அவர் நடித்தால் ஒருவேளை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளலாம் என என் டி ஆர் பயோபிக் இயக்குனர் க்ரிஷ் ஜகர்ல முடி நினைத்திருக்கலாம். அதெல்லாம் சரி... ஆனால், ஸ்ரீதேவியை வானத்து தேவதை ரேஞ்சுக்கு கொண்டாடித் தீர்க்கும் இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மாவுக்கு இதில் திருப்தி இருக்குமா என்று தெரியவில்லை. ஸ்ரீதேவியை தனது பாவனைகளில் கொண்டு வந்து அவரைப் போலவே நடித்து திரையில் ஸ்ரீதேவியை ரீபிளேஸ் செய்ய ரகுல் ப்ரீத் சிங்கால் முடியுமா? படம் வெளிவந்தால் தெரியும். மறைந்த நடிகை ஸ்ரீதேவி , என் டி ஆருடன் அவருடைய பல வெற்றிப்படங்களில் இணையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

