வடசென்னையைத் தொடர்ந்து மீண்டும் இணைகிறது தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி!

கேரம் விளையாட்டு வீரர் உலக சாம்பியனாக உழைத்துக் கொண்டிருக்கையில் எப்படி கேங்ஸ்டர் ஆனார்
வடசென்னையைத் தொடர்ந்து மீண்டும் இணைகிறது தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி!
Updated on
1 min read

தேசிய விருது பெற்ற ஆடுகளம், பொல்லாதவன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாரன் கூட்டணி வடசென்னையில் மீண்டும் இணைந்துள்ளது. வடசென்னையில் வாழும் அன்புவின் 35 வருட கால வாழ்க்கை (ட்ரயாலஜி) படமாக்கப்பட்டுள்ளது. 

வடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன். எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரம் விளையாட்டு வீரர் உலக சாம்பியனாக உழைத்துக் கொண்டிருக்கையில் எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பதை சமூக அரசியல் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் வடசென்னை திரைப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. 

நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் படம் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.  வட சென்னை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் வெற்றிமாறனுடன் இணைந்தே பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார். மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகம்தான் தற்போது வெளிவரவுள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. சசமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே  வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com