சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

லீனா மணிமேகலை மீது வழக்கு தொடர்ந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்!

தன் மீது பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதாக கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்...

News image
Updated On :17 அக்டோபர் 2018, 7:25 am

தன் மீது பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதாக கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார்.

அண்​மைகால​மாகச் சமூகவலை​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்​கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில் இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து இருவரும் பேட்டியளித்தார்கள். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன். 

கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். லீனா மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் மனு அளித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.