சினிமா மற்றும் அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகி வரும் வேளையில், விளையாட்டு துறையை சேர்ந்த தோனி, சச்சின், சாய்னா, மேரிகோம் போன்றவர்களின் வாழ்க்கை படங்களும் உருவாகின்றன. அடுத்து முதல் பெண்மணியாக விமான பைலட் ஆகி கார்கில் போரில் பங்கெடுத்த குன்ஜான் சக்சேனா வாழ்க்கை சரித்திரம் பல்வேறு மொழிகளில் படமாக உள்ளது. குன்ஜான் வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இதையடுத்து சமீபத்தில் குன்ஜானை நேரில் சந்தித்த அவர் கார்கில் போரில் அவர் ஆற்றிய சேவைக்குப் பாராட்டு தெரிவித்ததுடன் அவருடைய அனுபவம் பற்றியும் கேட்டறிந்தார். 1999-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த கார்கில் போரில் காயம் அடைந்த வீரர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கும், அங்குள்ள முகாம்களுக்கும் விமானத்தில் சென்று அவர்களை மீட்டு வரும் பணியில் குன்ஜான் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தடக்' என்ற ஹிந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர் அடுத்து விமான வீராங்கனையாக வேடமேற்றிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



