ரன்பீர் கபூருடன் காதலா? தங்கை அலியா பட் குறித்த கேள்விக்கு அக்கா பூஜா பட்டின் ‘நச்’ பதில்!

அலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி தற்போது  ‘பிரம்மாஸ்திரா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோடி, சமீபத்தில் நடிகை சோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுக்கும் நடைபெற்ற
ரன்பீர் கபூருடன் காதலா? தங்கை அலியா பட் குறித்த கேள்விக்கு அக்கா பூஜா பட்டின் ‘நச்’ பதில்!

பாலிவுட்டைக் கலக்கி வரும் இளம் புயல் அலியா பட், பிரசித்தி பெற்ற இந்தி இயக்குனர் மகேஷ் பட்டின் இளைய மகள். மகேஷ் பட்டுக்கு அலியா பட்டைத் தவிர பூஜா பட் என்றொரு மூத்த மகள் இருக்கிறார். அந்த பூஜா பட் சில காலம் தனது ஈடு இணையற்ற தாராள கவர்ச்சியால் பாலிவுட்டைக் கட்டியாண்டார். அதெல்லாம் ஒரு காலம். பூஜா பட் தமிழிலும் பிரசாந்த், அஜித் நடித்த திரைப்படமொன்றில் நாயகியாக நடித்திருக்கிறார்.

மகேஷ் பட்டின் மகள்களான பூஜா பட்டுக்கும், அலியா பட்டுக்கும் இடையில் வயது வித்யாசம் அதிகம். பூஜா பட் திரைத்தாரகையாக மின்னிக் கொண்டிருந்த போது அலியா பட் ஒரு வேளை வீட்டுத் தொட்டிலில் உறங்கிக் கொண்டோ அல்லது ஃப்ராமில் ஊர்ந்து கொண்டோ இருந்திருக்கலாம். அத்தனை குட்டித் தங்கை மீது பூஜாவுக்கு பாசம் இருக்காதா பின்னே! சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ். காமுக்கு அளித்த நேர்காணலொன்றில் பூஜாவிடம் அவரது தங்கை அலியா பட் சமீபகாலமாக இந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து சுற்றிக் கொண்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பூஜா அளித்த பதில் ‘நச்’ ரகம். 

முதலில் அலியா குறித்த கேள்விக்கு; ‘நீங்கள் என் தங்கை குறித்து ஏதாவது கேட்க வேண்டும் என நினைத்தால், அவளிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும். இப்போது என்னைப் பற்றியும் எனது பெர்சனல் வாழ்க்கை குறித்தும் மட்டுமே நான் பதில் சொல்ல முடியும் என்று தான் ஆரம்பித்தார். ஆனால் பாலிவுட்டில் சில திரை நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் எதைப் பற்றியும் வாயே திறக்க மாட்டார்கள். அப்படியே திறந்தாலும் எண்ணி, எண்ணியே வாய் முத்துக்களை உதிர்ப்பார்கள். போல்டாக தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முன் வைப்பவர்கள் வெகு குறைவு. அவர்களில் பூஜா பட் மாறுபட்டவர் என்று பெயரெடுத்தவர். வாழ்க்கையைப் பற்றிய அவரது புரிதலே பிற நடிகைகளிடமிருந்து முற்றிலும் மாறுபாடானது.

அக்கா பூஜா பட்டுடன் தங்கை அலியா பட் சிறுமியாக...

எனவே, தங்கை அலியா பட், ரிஷி கபூரின் மகனும், வெற்றிகரமான இளம் இந்தி ஹீரோக்களில் ஒருவருமான ரன்பீர்  கபூருடன் இணைந்து பாலிவுட் விழாக்களிலும், திருமணங்களிலும் பங்கேற்பது குறித்து... இருவருக்கும் காதலா?! எனக் கேள்வி எழுப்பப் பட்ட போது. உடனே பூஜாபட் கூறியது இந்த வார்த்தைகளைத் தான்.

‘என் தங்கை தனது நடிப்புத் திறனால் தானொரு சிறந்த நடிகை என்பதை மிக அருமையாக நிரூபித்திருக்கிறார். அவளைப் பொறுத்தவரை அவளது வாழ்வுக்கு எது நல்லது? எது கெட்டது? எது ஒத்து வராதது, எது சரியானது என்பதையும் அவளே முடிவு செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு அவளுக்கு மனமுதிர்ச்சி இருக்கிறது. தனது நடிப்பின் மூலமாக இந்திய மக்களை மிக அருமையாக எண்டர்டெயின் செய்யும் என் தங்கை. அந்த வேலையை மிக நன்றாகவே செய்து கொண்டிருக்கிறாள். அவளது வாழ்க்கை குறித்த எல்லா முடிவுகளையும் அவளே எடுக்கக் கூடிய அளவுக்கு அவளுக்கு பக்குவம் உண்டு. ஒருவேளை அந்த முடிவு தவறானதாகப் போனால் அதைச் சரியானதாக ஆக்கிக் கொள்ளவும் அவளுக்குத் தெரியும். எனவே மற்றவர்கள் அவள் என்ன செய்கிறாள்? என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு கருத்துச் சொல்லிக் கொண்டு இல்லாமலிருந்தால் நல்லது’ ஒரு விஷயத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்யாசமான கருத்துக்களும், புரிதல்களும் இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களை அவர்களது விஷயத்தில் அவர்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவது தான் நல்லது. அது நல்லதோ, கெட்டதோ அவளது பிரச்னைகளை அவளே பார்த்துக் கொள்வாள்.’ என்று பூஜா பட் கூறியிருக்கிறார்.

அலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி தற்போது  ‘பிரம்மாஸ்திரா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோடி, சமீபத்தில் நடிகை சோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் இணைந்து கலந்து கொண்டு அசத்தியது. அது முதல் தான் இவர்கள் இருவரைப் பற்றிய வதந்திகளும் பாலிவுட்டில் வலம் வரத்தொடங்கின. ரன்பீர் கபூர் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்; ‘தெரியவில்லை... நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கிறோம், எங்கள் இருவரின் புரிதல்கள் ஒன்றாக இருக்கிறது. அலியா என்னைப் போலவே யோசிக்கிறார். எங்களது முடிவுகள் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன, காதலா என்றால்? அதைப் பற்றிப் பேச இப்போது முடியாது. ஏனென்றால் எங்களுக்கே பதில் தெரியாது. இந்த நட்பு நன்றாக இருக்கிறது. எங்களுக்கு இதைப் பற்றி யோசிக்க அவகாசம் வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com