தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகையிடம் பறிக்கப்பட்ட செல்போன் 

சென்னை அண்ணாநகரில்  உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து, விலை உயர்ந்த செல்போனை திருடன் ஒருவன் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2018, 1:39 pm IST

சென்னை: சென்னை அண்ணாநகரில்  உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து, விலை உயர்ந்த செல்போனை திருடன் ஒருவன் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

‘ரேனிகுண்டா’ என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சஞ்சனா சிங். இவர் ‘அஞ்சான்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சஞ்சனா சிங் தினந்தோறும் அதிகாலையில் சைக்கிள் சவாரி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுபோல சனிக்கிழமை அதிகாலையும் வழக்கம்போல் அவர் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவு செய்த அவர், தனது விலையுயர்ந்த செல்போனில் வழிகாட்டும் மேப் செயலியை கையில் வைத்து பார்த்தபடியே சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அண்ணா நகர் சிந்தாமணி சிக்னல் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென சஞ்சனா சிங் கையில் இருந்த அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா கொள்ளையனை தனது சைக்கிளில் வேகமாக விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார்.

ஆனால் அவரால் முடியாமல் சிறிது தூரம் விரட்டிச் சென்று நின்று விட்டார். பின்னர் இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் சஞ்சனா சிங் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போன் கொள்ளையனை தீவிரமாகத் தேடி வருவாதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.