நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

'கோன் பனேகா க்ரோர்பதி’யில் கோடிகளை அள்ளிக் கொடுத்த நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ஜெயா பச்சன் தற்போது மூன்றாவது முறையாக தேர்வாகவுள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2018, 0:16 pm IST

மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ஜெயா பச்சன் தற்போது மூன்றாவது முறையாக தேர்வாகவுள்ளார். அதற்காக அவர் தன் சொத்து விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமாவில் நீண்ட கலமாக சினிமாவில் நடித்து வரும் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் ஆகியோரின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி என்கிறது ஜெயா பச்சன் அளித்த விண்ணப்பம்.

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1,000 கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட ஜெயா பச்சன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவுடன், தனது சொத்துகள் குறித்த பட்டியலையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: 'எனக்கும், எனது கணவர் அமிதாப் பச்சனுக்கும் ரூ.460 கோடிக்கும் மேல் அசையா சொத்துகள் உள்ளன. இதேபோல் ரூ.540 கோடிக்கும் மேல் அசையும் சொத்துகள் உள்ளன. அமிதாப் பச்சனிடம் ரூ.3.4 கோடி மதிப்புக்கு கைக்கடிகாரங்களும், என்னிடம் ரூ.51 லட்சம் மதிப்புக்கு கைக்கடிகாரங்களும் உள்ளன. 

அமிதாப் பச்சனிடம் ரூ.9 லட்சம் மதிப்புக்கு பேனாக்கள் உள்ளன. எனக்கும், எனது கணவருக்கும், பிரான்ஸ் நாட்டில் 3,175 சதுர மீட்டர் அளவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நொய்டா, போபால், புணே, ஆமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களிலும் சொத்துகள் உள்ளன. எனக்கு லக்னௌவில் ரூ.2.2 கோடி மதிப்புக்கு எனக்கு 1.22 ஹெக்டேர் விவசாய நிலமும், பாராபங்கி மாவட்டத்தில் அமிதாப் பச்சனுக்கு ரூ.5.7 கோடி மதிப்புக்கு 3 ஏக்கர் நிலமும் உள்ளது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் ஜெயா பச்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2012-ம் ஆண்டில் தெரிவித்திருந்த சொத்துகளின் மதிப்புகளைக் காட்டிலும், தற்போது ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரித்திருத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில், பாஜக எம்.பி. ரவீந்திர கிஷோர் தனக்கு ரூ.800 கோடி மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

ஜெயா பச்சன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும்பட்சத்தில், அவர்தான் மிகவும் வசதிப்படைத்த மாநிலங்களவை எம்.பி.யாக கருதப்படுவார். தற்போது உடல் நலக் குறைவால் ஓய்வில் இருக்கிறார் அமிதாப் பச்சன். அமீர் கான் நடிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்று வரும் படிப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் சென்றபோது உடல் நலிவுற்றார்.

அமிதாப்பின் தற்போதைய நிலைகுறித்து ஜெயா பச்சன் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: 'அமிதாப் நலமாக உள்ளார். முதுகு வலி, கழுத்து வலி அவருக்கு உள்ளது. படத்துக்காக அணிந்த ஆடைகள் எடை கூடுதலாக இருந்ததால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மற்றபடி அவர் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார்.' அமிதாப்பும் தனது ட்விட்டரில் தான் நலமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கவலைப்படவேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.