பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இயக்குநர் அட்லி மீது துணை நடிகை புகார்!

என்னை வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பிவிட்டார்கள். எனவே அட்லி மற்றும்...

News image
Updated On :23 ஏப்ரல் 2019, 9:29 am

எழில்

இயக்குநர் அட்லி, படப்பிடிப்பின்போது தன்னைத் தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்புத்தளத்தில் இயக்குநர் அட்லியும் உதவி இயக்குநர்களும் தன்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக துணை நடிகை கிருஷ்ணதேவி, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நான் பணிபுரிந்தேன். படப்பிடிப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இயக்குநர் அட்லியும் உதவி இயக்குநர்களும் என்னைத் தரக்குறைவான வார்த்தைகளில் பேசி என்னை வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பிவிட்டார்கள். எனவே அட்லி மற்றும் உதவி இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.