மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

விரைவில் திருமணம்: சூசகமாகத் தகவல் தெரிவித்த நடிகை தமன்னா!

முன்னணி நடிகையான தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவலை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2019, 6:59 am

எழில்

முன்னணி நடிகையான தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவலை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: நல்ல துணை கிடைத்தால் நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் நான் யாரையும் காதலிக்கவில்லை. என் மனத்தில் யாரும் இல்லை. எனக்கேற்ற துணையை என் அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். இதையடுத்து தமன்னா விரைவில் திருமணம் செய்துகொள்வார் எனத் தெரிகிறது. 

இந்த வருடம் தமன்னா நடிப்பில் தேவி 2, கண்ணே கலைமானே என இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அடுத்ததாக சுந்தர் சி இயக்கும் படம், பெட்ரோமேக்ஸ் என இரு தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.