தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும்.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், அதற்குப் பதிலாகத் தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இப்படத்துக்கு இசை - இமான். நகைச்சுவை நடிகராக சூரி நடிப்பது குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், தனது 25-வது படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் மேலும் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராஜ், மீனா ஆகிய இருவரும் இந்தப் படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசியாக 1995-ல் வெளியான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. அதன்பிறகு, 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் 2011-ல் வெளியான தம்பிக்கோட்டை என்கிற படத்துக்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடிக்கிறார் மீனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

