இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

எச்.ஐ.வியால் பாதிப்படைந்த குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய நாகக் கன்னி!

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விப்பது எப்படி என பிரபல தொலைக்காட்சி தொடரில் நாகக் கன்னியாக நடித்த மெளனி ராய்க்கு நன்றாகவே தெரியும்.

News image
Updated On :26 டிசம்பர் 2019, 7:28 am

IANS

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விப்பது எப்படி என பிரபல தொலைக்காட்சி தொடரில் நாகக் கன்னியாக நடித்த மெளனி ராய்க்கு நன்றாகவே தெரியும்.  பிறந்தது முதல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு அவர்களுடன் ஆடிப்பாடி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினார் 

Story image

ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவு செய்து,  தன்னுடன் நடனமாடச் செய்ததோடு, அவர்களுடன் விளையாடி மகிழ்ந்து மாலை முழுவதும் கழித்தார்.

Story image

இது குறித்து அவர் கூறியது, "எச்.ஐ.வி மற்றும் அது சார்ந்த தவறான புரிதல் குறித்து மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவுகிறது என்ற தவறான எண்ணம் மக்களிடமிருந்து நீங்க வேண்டும். இந்தக் குழந்தைகள் கவனிக்கப்பட வேண்டியவர்கள், சமுதாயத்தில் மற்றவர்கள் பெறும் அதே மரியாதை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

Story image

"அவர்களும் நம்மைப் போலவே இயல்பானவர்கள். இன்று நான் சந்தோஷமாக உணர்ந்தேன். மேலும் இது என் குழந்தைப் பருவ நாட்களை நினைவூட்டிவிட்டது. இந்த அப்பாவி குழந்தைகளுக்காக மறுபடியும் அந்த நாட்களை மீட்டெடுத்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியளித்தது. என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.