அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களைக் அதிகம் இருந்ததால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்த படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் இது :
களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகியவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு வேற லெவல் ரசிகர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் தோன்றினார்கள். ஓவியா ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரலமாகிய ஓவியா நான்கைந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். அத்தகைய ஹீரோயினை மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் 90 எம் எல் படத்தில் நடித்தேன் என்றும் கூறியிருக்கிறார் ஓவியா.
ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 3, சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 மற்றும் பிக் பாஸ் புகழ் ஆரவுடன் ‘ராஜபீமா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான 90 எம் எல் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலர் முகம் சுளிக்கும்படியான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதை அடுத்து பெண்ணியவாதிகள் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


