இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் கனவாக இருக்கும். இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திய அவர், பெரும் நட்சத்திரப் பட்டாளத்துக்கிடையே தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து பரவலான பாராட்டைப் பெற்றார். எல்லா தரப்பு ரசிகர்களிடையே படம் வரவேற்பை பெற்றது.
இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப் படமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான திரைக்கதையை அண்மையில் எழுதி முடித்தார். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்க நினைத்த மணிரத்னம், முதலில் விஜய், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, மகேஷ் பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, நான்கு மொழிகளில் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது பட்ஜெட் பிரச்னைகளால் அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், படம் பற்றிய மேலதிகத் தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


