இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

வர்மா படத்துக்குப் புதிய தலைப்பு: படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்!

வர்மா படத்தை மீண்டும் இயக்கும் தனது முடிவில் உறுதியாக உள்ள ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட், புதிய படக்குழுவையும் தற்போது உறுதி செய்துவிட்டது... 

News image
Updated On :20 பிப்ரவரி 2019, 5:13 am

எழில்

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடித்தார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதினார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்தார். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. படத்தின் இறுதி வடிவம் குறித்து பாலா - தயாரிப்பாளர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது. இயக்குநர் உள்ளிட்ட புதிய படக்குழுவினரும் கதாநாயகியும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்குக்கு, கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாகத் தேர்வானார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 

இந்நிலையில் வர்மா படத்தை மீண்டும் இயக்கும் வேலைகளில் ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் வேகவேகமாகக் களமிறங்கியுள்ளது. படத்துக்குப் புதிய தலைப்பும் படக்குழுவினரையும் முடிவு செய்து அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வர்மா என்கிற தலைப்பு தற்போது, ஆதித்ய வர்மா என மாற்றப்பட்டுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். மேலும் வர்மா படத்தில் நடித்த ரைஸா வில்சனுக்குப் பதிலாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளார். மேலும் வர்மா படத்துக்கு இசையமைத்த ரதன் இப்படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். 

இதன்மூலம் வர்மா படத்தை மீண்டும் இயக்கும் தனது முடிவில் உறுதியாக உள்ள ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட், புதிய படக்குழுவையும் தற்போது உறுதி செய்துவிட்டது. இதையடுத்து விரைவில் ஆதித்ய வர்மா-வின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.