அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பதனை ஆழ்மனதுக்குள் பதிய வைக்கும் திரைக் காவியம் தான் கிரீன் புக். அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு எதிராகப் பாகுபாடுகள் அதிகம் காணப்பட்ட காலகட்டத்தில், வெள்ளை இனத்தவர்களின் தாக்குதலில் இருந்து அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டிய பாதையைத் தெரிவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வழிகாட்டி புத்தகமே கிரீன் புக். அத்தகைய காலகட்டத்தில் நியூயார்க்கின் பிரான்க்ஸ் நகரில் இரவுநேரக் கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வெள்ளையர் ஒருவர், கருப்பினத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞர் ஒருவரிடம் ஓட்டுநராகப் பணியில் சேருகிறார். இசை நிகழ்ச்சிகளுக்காக பல நகரங்களுக்கு இசைக் கலைஞர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவரது ஓட்டுநரும் அவருடனேயே பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கிரீன் புக்கின் துணையுடன் அவர்கள் பல்வேறு நகரங்களுக்குப் பயணிக்கின்றனர். அப்போது, கருப்பினத்தவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளால், அவர்கள் எதிர்கொள்ளும் துயரை இத் திரைப்படம் எடுத்துரைக்கிறது. அதேநேரத்தில், கருப்பினத்தவர்களுக்கும், வெள்ளை இனத்தவர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் காணப்பட்டாலும், அவர்கள் இருவருக்கிடையே தோன்றும் நட்புறவை அழகுற வெளிப்படுத்தியுள்ளது கிரீன் புக்.
இதனை பீட்டர் ஃபாரெல்லி இயக்கியுள்ளார். இதில் கருப்பினத்தவராக நடித்த மகேர்ஷலா அலி, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் எதிர்ப்பு
கிரீன் புக் திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர். கருப்பு வெள்ளை இனத்தவருக்கு இடையேயான பல்வேறு பிரச்னைகளை இத் திரைப்படம் சரிவர வெளிக் கொணரவில்லை என்று அவர்கள் விமர்சித்தனர்.
பீரியட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்
இந்தியக் கலாசாரத்தில் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்படாத சூழலையும், அதனால் அவர்கள் சந்திக்கும் சமூகப் பிரச்னைகளையும், அவற்றைப் போக்க ஹபூர் கிராமப் பெண்கள் நிகழ்த்திய சிறிய அளவிலான புரட்சியையும் இந்த ஆவணக் குறும்படம் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
மாதவிடாய் பிரச்னைகள் காரணமாக ஏற்பட்ட உடல் கோளாறுகளாலும், பள்ளி செல்ல முடியாமல் போனதாலும், ஹபூரிலுள்ள பெண்கள் தங்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்களைத் தாங்களே தயாரிக்கக் கற்றுக்கொண்டு, வாழ்க்கை நிலையை எப்படி உயர்த்தினர் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்து இயம்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



