பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறியதாவது...

News image
Updated On :2 ஜனவரி 2019, 11:23 am

எழில்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறியதாவது:

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர்.  அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது.. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில்   நடிக்குமாறு என்னிடம் கேட்டார். இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் அளவுக்குப் படம் பண்ணக்கூடியவர். அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது  ஆசை. மேலும் இது சிவா அண்ணன் படம்... உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்குச் சென்றேன். 

அந்தக் கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. செம ஜாலியான, நட்புக்கு மரியாதை கொடுக்கும் அற்புதமான குழுவினர். கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 

இன்னொரு பக்கம், நான்  கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களை எனது தயாரிப்பில் உருவாக்கவேண்டும் என்பதற்காக இரண்டு கதைகளைத் தேர்வு  செய்துள்ளேன்.  மற்றொரு தயாரிப்பாளரின் படத்திலும் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.   

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனத்தில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். 2019-ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்  பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.