/

ஜல்லிக்கட்டைக் காப்பாற்றிவிட்டோம், அடுத்ததாக இதையும் காப்பாற்றவேண்டும்: நடிகை அதுல்யா வேண்டுகோள்! (விடியோ & படங்கள்)

நம் கலாசாரத்தைக் காப்பாற்றுவது ஜல்லிக்கட்டு. அதை நாம் காப்பாற்றிவிட்டோம். அதேபோல...

News image
Updated On :16 ஜனவரி 2019, 5:22 am

எழில்

தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டைக் காப்பாற்றிவிட்டோம், அதுபோல விவசாயத்தையும் காப்பாற்றவேண்டும் என்று நடிகை அதுல்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். பொங்கல் என்றாலே ஞாபகத்துக்கு வருவது கரும்பும் சர்க்கரைப் பொங்கலும்தான். அதுமட்டும் பொங்கல் கிடையாது. உழவர் திருநாள், ஜல்லிக்கட்டு என எல்லாவற்றையும் சேர்த்துத்தான் பொங்கலைக் கொண்டாடுகிறோம். நம் கலாசாரத்தைக் காப்பாற்றுவது ஜல்லிக்கட்டு. அதை நாம் காப்பாற்றிவிட்டோம். அதேபோல விவசாயிகளையும் நாம் காப்பாற்றவேண்டும். இந்த வருடம் நம்முடைய விவசாய நிலங்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. அவையெல்லாம் சீக்கிரம் சரியாகி,  நிறைய மழை பெய்து, பொங்கல் திருநாளிலிருந்து நமக்கு நல்ல காலம் வரும் என நான் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.