திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்' அளித்த விஜய் சேதுபதி!

தன்னுடைய பிறந்தநாளுக்காக ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கூடிய விருந்து படைத்தார். இந்த டபுள் ட்ரீட், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

News image
Updated On :17 ஜனவரி 2019, 3:25 pm

நடிகர் விஜய் சேதுபதி தனது 41-ஆவது பிறந்தநாளை புதன்கிழமை (ஜன. 16) கொண்டாடினார். இதையடுத்து திரையுலகில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் அன்பு மழையிலும் விஜய் சேதுபதி கொண்டாடப்பட்டார்.

திரையுலகில் மக்கள் செல்வன் என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்காக ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கூடிய விருந்து படைத்தார். அது, தான் நடித்து வரும் அடுத்தடுத்த படங்களின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை அவருடைய பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டன.

அவை தமிழில் நடித்து வரும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ஸைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஆகும்.

தற்போதைய நடிகர்களில் மிகப்பெரிய இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் இந்த டபுள் ட்ரீட், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.