சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிக் பாஸ் வீட்டுக்குள் போலீஸ்: நடிகை வனிதா விஜய்குமாரிடம் விசாரணை!

சொந்த மகளையே கடத்திய வழக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை வனிதா விஜய்குமாரிடம் தெலங்கானா காவல்துறையினர்...

News image
Updated On :3 ஜூலை 2019, 6:12 am

எழில்

சொந்த மகளையே கடத்திய வழக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை வனிதா விஜய்குமாரிடம் தெலங்கானா காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

நடிகை வனிதா விஜய் குமார் தனது மகளைக் கடத்தியதாக அவருடைய 2-வது கணவரான ஆனந்த்ராஜ், தெலங்கானா காவல்துறையிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதையடுத்து வனிதா விஜய்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் திருமணம் விவாகரத்து ஆன பிறகு ஆனந்த்ராஜை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் 2012-ல் ஆனந்த்ராஜையும் வனிதா விவாகரத்து செய்தார். 2-வது கணவரைப் பிரிந்த வனிதா, தனது மகள் ஜெனிதாவைப் பார்க்க ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துவந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வனிதா மீது காவல்துறையிடம் புகார் அளித்தார் ஆனந்த்ராஜ். வனிதா விஜய்குமாருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார். 

வனிதா, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா விஜய்குமாரையும் அவருடைய மகளையும் தேடிவந்த தெலங்கானா காவல்துறை தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றுள்ளார்கள். விசாரணைக்குப் பிறகு அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.