சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவாரா அல்லது தக்கவைக்கப்படுவாரா...

News image
Updated On :9 ஜூலை 2019, 5:57 am

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சிலரை வில்லனாகவும் வில்லியாகவும் எண்ணுவார்கள் ரசிகர்கள். அதுபோல இந்த வருட பிக் பாஸில் வனிதா விஜய்குமாரின் பலருடைய விமரிசனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். போட்டியாளர்களிடம் அவர் பேசும் விதம், அபிராமி, மதுமிதாவுக்கு எதிராக அவர் மற்றவர்களிடம் பேசுவது போன்ற செயல்களை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பது சமூகவலைத்தளப் பதிவுகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறுபவருக்கான எலிமினேஷன் நடைமுறையில் வனிதா விஜயகுமார், மீரா மிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில் வனிதாவை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சக போட்டியாளர்களிடம் பெரும்பாலும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதால் வனிதா வெளியேறவேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். எனினும் இந்த பிக் பாஸ் சுவாரசியமாக இருப்பதற்கு வனிதா விஜயகுமார் முக்கியக் காரணம். அதனால் அவர் இவ்வளவு சீக்கிரம் வெளியேறக்கூடாது என்றும் சிலர் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவாரா அல்லது தக்கவைக்கப்படுவாரா என்பது இந்த வார இறுதியில் தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.