கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தொடரும் சிக்கல்: ஆடை படத்தின் காலைக்காட்சி ரத்தானது

ஒரு படத்தின் வெளியீட்டுக்குப் பிரச்னை எதுவும் இல்லை என்கிற நிலை உருவான பிறகே...

News image
Updated On :19 ஜூலை 2019, 5:39 am

எழில்

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் - ஆடை. அமலா பால் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஆடை படத்தின் காலைக் காட்சி மற்றும் பத்திரிகையாளர் காட்சிகள் ரத்தாகியுள்ளன. தயாரிப்பாளருக்குப் பண விவகாரம் தொடர்பான பிரச்னைகள் உள்ளதால் திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை. இதனால் காலைக்காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் அடிக்கடி இதுபோன்ற சிக்கல்கள் உருவாவதால் ரசிகர்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. ரசிகர்களின் பணம் மட்டுமல்லாமல் நேரமும் வீணாகிறது. ஒரு படத்தின் வெளியீட்டுக்குப் பிரச்னை எதுவும் இல்லை என்கிற நிலை உருவான பிறகே முன்பதிவைத் தொடங்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு எதுவும் இதுவரை காணப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.