முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறேன்: ஸ்ரீமன் பெருமிதம்!
19 வருடத்துக்குப் பிறகு இயக்குநர் முருகதாஸ் சாரின் படத்தில் நடித்துள்ளேன்...


சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் ரஜினி. வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீமன், பட அனுபவம் குறித்து ட்விட்டரில் கூறியதாவது:
19 வருடத்துக்குப் பிறகு இயக்குநர் முருகதாஸ் சாரின் படத்தில் நடித்துள்ளேன். முதல்முறையாக என் திரையுலக வாழ்வில் தலைவர் - சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் சிவன் அவர்களின் கேமராவில் பதிவாகியுள்ளேன். லைகாவுக்கு நன்றி என்று தனது உணர்வுகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...