/

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு! 

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்டப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

News image
Updated On :19 ஜூன் 2019, 6:35 am

எழில்

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. எனினும், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்டப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.