இன்று மூன்று தமிழ்ப் படங்கள் வெளியீடு!
விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படம் சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகாத நிலையில் மூன்று தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன...


விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படம் சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகாத நிலையில் மூன்று தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன.
தும்பா, பக்கிரி, மோசடி என மூன்று தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன.
பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', ஹாலிவுட் படமாக உருவாகியுள்ளது. The Extraordinary Journey of the Fakir என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து Uma Thurman மற்றும் Alexandra Daddario
போன்றோரும் நடித்துள்ளார்கள். கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் இந்தப் படத்துக்கு பக்கிரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தும்பா என்கிற நகைச்சுவை கலந்த சாகசப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். இவர், நடிகர் அருண் பாண்டியனின் மகள். கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார். இசை - அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...