நடிகர் சங்கத் தேர்தல்: ஒரு விரல் புரட்சி செய்த விஜய்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. 
நடிகர் சங்கத் தேர்தல்: ஒரு விரல் புரட்சி செய்த விஜய்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. 

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடக்கவுள்ள இந்தத் தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை  நடைபெறுகிறது. நாடக நடிகர்கள், சினிமா நடிகர்கள் என மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் 3,171 பேர். 

தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தமாக 69 பேர் போட்டியிடுகின்றனர். 

நாசர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் தலைமையிலான அணிக்கு 'பாண்டவர் அணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். 

'பாண்டவர் அணி'யை எதிர்த்து போட்டியிடும் அணிக்கு 'சுவாமி சங்கரதாஸ் அணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணியில் கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் போட்டியிடுகிறார்.

அனைவரும் வாக்களிக்க வசதியாக ஞாயிற்றுக்கிழமை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலில் நடிகர் விஜய் காலை 11:45 மணியளவில் வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com