பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஓர் இடத்தில் இரு வாரங்கள் மட்டுமே தங்க முடியும்:  நடிகை ஷெரினின் ‘பிக் பாஸ்’ கவலை!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதை...

News image
Updated On :24 ஜூன் 2019, 10:20 am

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நேற்று முதல் தொடங்கியுள்ளது. 

விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த "பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.  இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதைத் தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கில் சூசகமாகத் தெரிவித்துள்ளார் ஷெரின். அதில் அவர் கூறியுள்ளதாவது:

என்னுடைய அடுத்த பயணத்துக்காக ஆர்வமாக உள்ளேன். ஓர் இடத்தில் என்னால் அதிகபட்சமாக இரு வாரங்கள் மட்டுமே தங்கமுடியும். பதற்றமான நிலையில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.