/

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வரிச்சலுகை இல்லாத நிலையிலும் பாரதியின் வரிகளைப் படத்தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் வினோத்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:36 pm IST

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. 

இந்நிலையில் இப்படத்துக்கு, நேர்கொண்ட பார்வை என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வரிச்சலுகை இல்லாத நிலையிலும் பாரதியின் வரிகளைப் படத்தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் வினோத்.

2019 கோடைக் காலத்தில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகும். இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

அஜித்தின் 60-வது படம் இந்த வருடம் ஜூலையில் ஆரம்பமாகும். அந்தப் படம் 2020 ஏப்ரலில் வெளியாகும். போனி கபூர் இவ்விரு படங்களையும் தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.