பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மரணம் 

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு (82) சென்னையில் இன்று காலமானார்.
பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மரணம் 
Updated on
1 min read

சென்னை: பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு (82) சென்னையில் இன்று காலமானார்.

திருச்சியில் பிறந்த இவரது குடும்பம் அவரது இளவயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டது. கல்லூரி நாட்கள் முதலே நாடகங்களில் நடிப்பதில் தான் அவர் ஆர்வத்துடன் இருந்தார். பின்னர் வேலை கிடைத்தாலும், தொடர்ந்து வேலை செய்துகொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் தொடர்ச்சியாக டைப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் அதுவே இவருக்கு பட்டப்பெயர் ஆகி விட்டது.

இவர் நடித்த முதல் படம் 'அதே கண்கள்'. அங்கு தொடங்கி 'உயர்ந்த மனிதன்', 'காசேதான் கடவுளடா', 'பரீட்சைக்கு நேரமாச்சு', 'மைக்கேல் மதன காமராஜன்' என பலப்படங்களில் நடித்துள்ளார்.

சோ, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரின் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர்.

தனது இறுதிக்கு காலத்தில் ராயபேட்டையில் மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.

புதன் கிழமை அன்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அயப்பாக்கம் மயானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com