சூர்யாவின் ‘என்ஜிகே’ திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு 

இயக்குநர் செல்வராகவன், நடிகர் சூர்யா  கூட்டணியில் உருவாகியுள்ள 'என்ஜிகே' திரைப்படம் வெளியாகும் தேர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ‘என்ஜிகே’ திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு 

சென்னை: இயக்குநர் செல்வராகவன், நடிகர் சூர்யா  கூட்டணியில் உருவாகியுள்ள 'என்ஜிகே' திரைப்படம் வெளியாகும் தேர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின் வெளியீடு விரைவில் நிகழவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 'என்ஜிகே' திரைப்படம் வெளியாகும் தேர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படம் மே 31+-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com