கர்ப்பத்தை உறுதி செய்த ரஜினி பட நாயகி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பட நாயகி எமி ஜாக்சன் கர்ப்பமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
கர்ப்பத்தை உறுதி செய்த ரஜினி பட நாயகி!
Updated on
1 min read

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பட நாயகி எமி ஜாக்சன் கர்ப்பமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மாடல் எமி ஜாக்சன், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நாயகியானார்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் விஜய் உடன் தெறி மற்றும் இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்திருந்தார்.

பின்னர் இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட படைப்பான 2.0 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்தார். தற்போது ஹாலிவுட்டின் சூப்பர்கேள் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் கர்ப்பமடைந்துள்ளதாக எமி ஜாக்சன் அறிவித்துள்ளார். இந்த செய்தியை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபரும், தன்னுடைய நீண்டகால நண்பருமான ஜார்ஜ் பனயோடு உடன் எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com